மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக காலாந்தர மீளாய்விற்காக இலங்கையின் வரைவு தேசிய அறிக்கை மீதான கருத்துகளும், அவதானிப்புரைகளும் கோரப்படுகின்றன

  • அனைத்துலக காலாந்தர மீளாய்வு என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் 193 அங்கத்துவ நாடுகள் அனைத்தினதும் மனித உரிமைகள் பற்றிய பதிவேடுகள்காலத்துக்கு காலம் மீளாய்வு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒருநடைமுறையாகும். இது 2006 மார்ச் 15 ஆம் திகதியிடப்பட்டதும், 60/251 ஆம்இலக்கத்தைக் கொண்டதுமான ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவைத்தீர்மானத்தினால் மனித உரிமைகள் மன்றம் உருவாக்கப்பட்ட போதுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்துலக காலாந்தர மீளாய்வின் கீழ்ஐக்கிய நாடுகள் அமைப்பின் சகல அங்கத்துவ நாடுகளினதும் மனித உரிமைகள்4.5 வருடங்களுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படுகின்றன.
  • அனைத்துலக காலாந்தர மீளாய்வு என்பது ஓர் நாட்டினால் மேற்கொள்ளப்படும்நடைமுறையாகும். நாடொன்றில் மனித உரிமைகள் நிலைமையைமேம்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பதுபற்றி பிரகடனப்படுத்துவதற்கு நாடு ஒவ்வொன்றிற்கும் வாய்ப்பொன்றுவழங்கப்படுவதுடன், அந்த நாடுகள் தங்களுடைய அந்தந்த மனித உரிமைகளின்கடப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கும், அவற்றிற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அனைத்துலக காலாந்தர மீளாய்வு என்பது, நாடு ஒவ்வொன்றும் அவற்றின் மனிதஉரிமைகளின் நிலைமைகள் மதிப்பிடப்படும் போது அந்தந்த நாடுஒவ்வொன்றிற்கும் சமத்துவமான முறையில் அவை நடாத்தப்படுவதைஉறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின் இறுதிக்குறிக்கோள், சகல நாடுகளிலும் உள்ள மனித உரிமைகள் நிலைமையைமேம்படுத்துவதும், மனித உரிமைகள் மீறப்படும் போது அவற்றிற்கு பரிகாரம்வழங்குவதும் ஆகும்.
  • நாடொன்றின் மீளாய்வு அனைத்துலக காலாந்தர மீளாய்வுத் தொழிற்பாட்டின்தொகுதியினால் மேற்கொள்ளப்படுகின்றது. இது மனித உரிமைகள் மன்றத்தின் 47 அங்கத்தவர்களில் ஒருவராக இல்லாத எந்தநாடும் ஐக்கிய நாடுகள் அமைப்பின்அங்கத்துவ நாட்டிற்கு குறிப்பிட்ட நேரமொன்றில் மீளாய்வின் கீழுள்ள நாடுகளுடன்மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களில்/உரையாடல்களில் பங்குபற்ற முடியும். மீளாய்வின் போது சிவில் சமூக அமைப்புக்களும், தேசிய மனித உரிமைநிறுவனங்களும் கூட இதில் பங்குபற்ற முடியும். More details
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Time limit is exhausted. Please reload CAPTCHA.